Saturday 31 March 2018

 அருள்மிகு பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதர்  திருக்கோயில்
             ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ளது திருவெற்றியூர்.இவ்வூரில் மிகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு பகம்பிரியாள் அம்மன் சமேத வன்மீகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

        இக்கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கானோரும் வியாழன்-வெள்ளி கிழமைகளில் ஆயிரக் கணக்கானோரும் வருகைபுரிந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
தென் தமிழகத்தில் மிக பிரபலமான கோயில்களில் இத்தலமும் ஒன்று.

        சிவ தலமாக இருந்தாலும் அம்மனின் புகழால் பாகம்பிரியாள் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.மேலும் இவ்வூர் பெயரை குறிப்பிட்டால் கூட பலருக்கு தெரியாது.ஆனால் அம்மனின் திருப்பெயரை உச்சரித்தால் அனைவர்க்கும் அறிந்த ஒன்றாக இருக்கும்.


நிர்வாகம்:
       இக்கோயில் சிவகங்கை தேவஸ்தான ஆளுகைக்கு உட்பட்டது.முன்னொரு நாளில் இது ராமநாதபுரம் சமஸ்தானதால் சிவகங்கை சமஸ்தானத்திற்கு திருமண சீதனமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


கோயில் அமைப்பு:
1)சிவன்(வல்மீகநாதர்) சன்னதி
2)அம்மன்(பாகம்பிரியாள்) சன்னதி
3)வில்வமர அடியில் விநாயகர்
4)அகஸ்திய விநாயகர் சன்னதி
5)தட்சிணாமூர்த்தி
6)முருகன் சன்னதி
7)சண்டிகேஸ்வரர்
8)பைரவர் சன்னதி
9)நவ கிரகம்
10)சனீஸ்வரர் சன்னதி
12)கொடிமரம்
13)நந்தி மண்டபம்
14)வாசுகி தீர்த்த தெப்பக்குளம்

கோயில் திறப்பு:
      காலை 6.00-பகல் 12.00
      மாலை 4.00-இரவு 8.00

திருவிழாக்கள்:
       - சித்திரை திருவிழா(10 நாட்கள்)
       -ஆடி பூச்சொரிதல்(கடைசி திங்கள்)

தலவரலாறு:






அமைவிடம்:
       -மதுரை 100 கி.மீ
       -திருச்சி 140 கி.மீ
       -தொண்டி 10 கி.மீ
       -திருவாடானை 12 கி.மீ
       -தேவகோட்டை 32 கி.மீ
       -காரைக்குடி 52 கி.மீ
       - ராமநாதபுரம் 40 கி.மீ
       -ராமேஸ்வரம் 95 கி.மீ


வழி:
     1)திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் பேருந்தில் ஏறி திருவாடானை வந்து இறங்கவும்.பின்னர் அங்கிருந்து அடிக்கடி திருவெற்றியூர் பேருந்துகள் உள்ளன.
      2)1)மதுரையில் இருந்து தொண்டி பேருந்தில் ஏறி திருவாடானை வந்து இறங்கவும்.பின்னர் அங்கிருந்து அடிக்கடி திருவெற்றியூர் பேருந்துகள் உள்ளன.
    3)ராமநாதபுரத்தில் இருந்து திருவாடானை வழியாகவும் அல்லது கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும் இவ்வூரை அடையலாம்.


சிறப்பு
      -அனைத்து மதத்தாரும் வணங்கும்     அம்பிகை
      -ஆண்டின் அனைத்து வியாழன்-வெள்ளி கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம்.
     -சித்திரை பவுர்ணமி நாளில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பாத யாத்திரை.
    -ஆடி வெள்ளிக் கிழமைகளில் கட்டுக்கடங்காத கூட்டம்.
     -தினசரி கோயில் மண்டபங்களில் தங்கும் பக்தர்கள்.


முகவரி:
      ஸ்ரீ பாகம்பிரியாள் திருக்கோயில்,
      திருவெறியூர்&PO,
      திருவாடானை தாலுகா,
      ராமநாதபுரம் மாவட்டம்-623407










2 comments:

  1. luckyclub.live
    Luckyclub.Live is the first live casino site offering sports betting for the Asian market. Read our casino news on the Live Asian & luckyclub.live Sports section.Welcome to the Live Casino section of Luckyclub.Welcome to the Live Casino section of Luckyclub.Live: Live Casino, Live Casino, Live Sportsbook, Live Streaming

    ReplyDelete
  2. Best Online Slots & Live Dealer Casinos of 2021 - JTM Hub
    Play 수원 출장안마 your favorite 안동 출장마사지 online slots and live dealer casino games at 문경 출장샵 JTM, the 서귀포 출장샵 world's 전라남도 출장샵 largest online slots and live casino.

    ReplyDelete